ஆம்லெட் தோசை ரோல்



தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • முட்டை 
  • பெரிய வெங்காயம் 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • மிளகாய் தூள்
  • உப்பு
  • எண்ணெய் 
  • கொத்தமல்லி இலை 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

முதலில், ஒரு பாத்திரத்தில், ஒரு முட்டை, பொடியாக நறுக்கிய நான்கு ஸ்பூன் பெரிய வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள முட்டையை பரவலாக ஊற்றி, சிறிதளவு மிளகுத்தூள், மிளகாய் தூள் தூவி விட்டு, தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்து ரோல் செய்யவும்.
Previous Post Next Post