தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- முட்டை
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகுத்தூள்
- குடைமிளகாய்
- சில்லி சாஸ்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, சிறிதளவு குடைமிளகாய், இரண்டு முட்டை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள முட்டையை தோசை கல்லில் ஊற்றி, மிளகுத்தூள், தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர், தயார் செய்து வைத்துள்ள சப்பாத்தியின் மேல், சில்லி சாஸ் தடவி, தயார் செய்து வைத்துள்ள ஆம்லெட்டை அதன் மேல் வைத்து ரோல் செய்யவும்.
