காலிஃப்ளவர் மசால் வடை


தேவையான பொருட்கள் 

  • காலிஃப்ளவர் 
  • கடலைப்பருப்பு 
  • பெரிய வெங்காயம் 
  • இஞ்சி 
  • பூண்டு
  • பச்சை மிளகாய் 
  • சோம்பு 
  • மிளகாய் தூள் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 

செய்முறை 

ஒரு கப் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து விட்டு அதனுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். 

அதனுடன், 1/4 கப் பொடியாக நறுக்கிய காலிஃப்ளவர், ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

பின், சிறிய உருண்டைகளாக பிடித்து தட்டி எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.
Previous Post Next Post