பிரட் லட்டு


தேவையான பொருட்கள் 

  • பிரட் 
  • சர்க்கரை 
  • நெய் 
  • ஏலக்காய் 
  • முந்திரி 
  • உலர் திராட்சை 

செய்முறை 

முதலில், பத்து பிரட் துண்டுகள் எடுத்து அதில் நான்கு புறமும் நீக்கி விடவும். 

பின், பிரட் துண்டுகளை ஒன்று-இரண்டாக பொடித்து, இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.‌

மேலும், கடாயில், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து, முந்திரி, உலர் திராட்சை சேர்த்து அவற்றையும் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.‌

மற்றொரு கடாயில், 50 கிராம் சர்க்கரை, நான்கு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை உருகியவுடன், தயார் செய்து வைத்துள்ள பிரட் சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து விடவும். 

பின்னர், வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை, தட்டிய இரண்டு ஏலக்காய், இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விட்டு, ஆறிய பின் சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
Previous Post Next Post