தேவையான பொருட்கள்
- சாதம்
- ஸ்வீட் கார்ன்
- பட்டர்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- மிளகுத்தூள்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் பட்டர், 1/2 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும்.
பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
