தேவையான பொருட்கள்
- சாதம்
- ஸ்வீட் கார்ன்
- குடைமிளகாய்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- உப்பு
- எண்ணெய்
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய், 1/2 ஸ்பூன் தனியா தூள், 1/2 ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும்.
பின், 1/4 கப் வேக வைத்த ஸ்வீட் கார்ன், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து இறக்கவும்.
