தக்காளி கிச்சடி


தேவையான பொருட்கள் 

  • பச்சரிசி 
  • தக்காளி 
  • பாசிப்பருப்பு 
  • சாம்பார் தூள்
  • மிளகாய் தூள்
  • மிளகு 
  • சீரகம் 
  • கடுகு
  • கறிவேப்பிலை 
  • நல்லெண்ணெய் 
  • நெய் 
  • உப்பு 

செய்முறை 

குக்கரில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் மிளகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு தக்காளி சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து கலந்து விட்டு, 1/2 மணி நேரம் ஊற வைத்த 250 கிராம் அரிசி மற்றும் 100 கிராம் பாசிப்பருப்பு சேர்த்து 500 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு இரண்டு விசில் விடவும். 

இறுதியாக, ஐந்து ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post