உருளைக்கிழங்கு பொரியல் சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்


1) உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் பொழுது சிறிதளவு அரிசி மாவு சேர்த்தால் நன்கு சுவையாக மொறுமொறுப்பாக இருக்கும். 

2) உருளைக்கிழங்கு பொரியல் செய்யும் பொழுது வெங்காயம் வதக்கும் போது சிறிதளவு இஞ்சி, இரண்டு பல் பூண்டு தட்டி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். 

3) உருளைக்கிழங்கு பொரியல் தாளிக்கும் போது சோம்பு சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும். 

4) சிறிதளவு தேங்காய், 1/2 ஸ்பூன் சோம்பு வெச்சு அரைத்து உருளைக்கிழங்கு வேக வைக்கும் போது சேர்த்தால் பொரியல் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post