1) பாகற்காயை பொடியாக நறுக்கி, ஒரு காட்டன் துணியில் விரித்து விட்டு இரண்டு மணி நேரம் வைக்கவும்.
2) பொடியாக நறுக்கிய பாகற்காயை கடாயில் போட்டு சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கினால் கசப்பு தன்மை குறையும்.
3) கடாயில், பொடியாக நறுக்கிய பாகற்காய் சேர்த்து வதக்கி, அதனுடன் சிறிதளவு புளிக்கரைசல் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைத்து இரண்டு மணி நேரம் வைத்து, பின் குழம்பில் சேர்த்தால் கசப்பு தன்மை இருக்காது.
4) பாகற்காய் குழம்பில் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.
