பூசணிக்காய்-தேங்காய் சாதம்


தேவையான பொருட்கள் 

  • மஞ்சள் பூசணி 
  • தேங்காய் 
  • சாதம் 
  • பச்சை மிளகாய் 
  • பெரிய வெங்காயம்
  • கடுகு 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • தேங்காய் எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

தோல் சீவி பொடியாக நறுக்கிய 1/2 கப் மஞ்சள் பூசணியை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், மசித்து வைத்துள்ள பூசணி, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.
Previous Post Next Post