பாசிப்பருப்பு-சீரக சாதம்


தேவையான பொருட்கள் 

  • பாசிப்பருப்பு 
  • அரிசி 
  • சீரகம் 
  • நெய் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 

செய்முறை 

குக்கரில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு கப் பாசிப்பருப்பு சேர்த்து பாசிப்பருப்பு பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். 

பின், 1/2 மணி நேரம் ஊற வைத்த இரண்டு கப் அரிசி, நான்கு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும். 

இறுதியாக, நான்கு ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து விடவும். 

இதனுடன், கொத்தமல்லி துவையல் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post