தேவையான பொருட்கள்
- தயிர்
- கொத்தமல்லி இலை
- சாதம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- கடுகு
- கடலைப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், 1/4 கப் கொத்தமல்லி இலை, ஒரு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி சேர்த்து நன்கு அரைத்து 1/2 கப் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள தயிரை ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பின்னர், கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து சாதத்தை தாளிக்கவும்.
