தேவையான பொருட்கள்
- இட்லி
- வேர்க்கடலை
- பூண்டு
- கடலைப்பருப்பு
- கறிவேப்பிலை
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
செய்முறை
கடாயில், 1/4 கப் வேர்க்கடலை, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, இரண்டு பல் பூண்டு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு வறுத்து ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு கப் பொடியாக்கிய இட்லி, அரைத்து வைத்துள்ள பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
