இஞ்சி சிக்கன்


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • இஞ்சி 
  • பச்சை மிளகாய் 
  • மிளகு 
  • பூண்டு 
  • மஞ்சள் தூள் 
  • சோம்பு
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய நான்கு ஸ்பூன் இஞ்சி, பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டு, நான்கு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.‌

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். 

பின்னர், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

மேலும், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும். 

இறுதியாக, இரண்டு ஸ்பூன் உடைத்த மிளகு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post