தேவையான பொருட்கள்
- பூண்டு
- கறிவேப்பிலை
- தேங்காய்
- புளி
- மஞ்சள் தூள்
- சாம்பார் தூள்
- வெல்லம்
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- பெருங்காயத்தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
முதலில், ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, 1/4 கப் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை, 1/4 கப் புளிக்கரைசல், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர், இரண்டு ஸ்பூன் சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியாக, 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு இறக்கவும்.
