தேவையான பொருட்கள்
- சாதம்
- கீரை
- பூண்டு
- கடலைப்பருப்பு
- உளுந்து பருப்பு
- காய்ந்த மிளகாய்
- கடுகு
- உப்பு
- கறிவேப்பிலை
- நல்லெண்ணெய்
செய்முறை
கடாயில், 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய், நான்கு பல் பூண்டு, இரண்டு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து ஒன்று-இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
மற்றொரு கடாயில், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய கீரை ஒரு கப் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி, ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
