1) இட்லி மாவு அரைக்கும் போது, இரண்டு கப் அரிசிக்கு 1/4 கப் நனைத்த அவல் சேர்த்து அரைக்கவும்.
2) இட்லி மாவுக்கு அரிசி ஊற வைக்கும் போது, ஒரு கிலோ அரிசிக்கு 50 கிராம் ஜவ்வரிசி என்ற அளவில் ஜவ்வரிசியும் சேர்த்து ஊற வைத்து அரைக்கவும்.
3) இட்லிக்கு மாவு அரைக்கும் போது ஒரு கைப்பிடி சாதம் சேர்த்து அரைக்கவும்.
4) இட்லி மாவுக்கு அரிசி ஊற வைக்கும் போது, 500 கிராம் அரிசி, 20 கிராம் ஜவ்வரிசி, 20 கிராம் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக ஊற வைத்து அரைக்கவும்.
