பஜ்ஜி சுவை அதிகரிக்க நான்கு டிப்ஸ்



1) பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் பொழுது சிறிதளவு தயிர் சேர்த்து மாவு கரைத்தால் பஜ்ஜி நன்கு மிருதுவாக இருக்கும். 

2) வெங்காய பஜ்ஜி செய்யும் போது வெங்காயத்தை நறுக்கி தோசை கல்லில் எண்ணெய் சேர்த்து லேசாக ஃப்ரை செய்து, பின் மாவில் போட்டு வெங்காய பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும். 

3) பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் போது சிறிதளவு சீரகம் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். 

4) ஒரு தக்காளி, சிறிதளவு சீரகம் நன்கு அரைத்து பஜ்ஜி மாவில் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post