1) கருவாடு வறுவல் செய்யும் பொழுது பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
2) கருவாடு வறுவல் செய்யும் போது, கருவாடு பாதி அளவு வெந்த பின், முட்டை சேர்ந்து கலந்து விட்டு வேக வைத்தால் சுவை அதிகரிக்கும்.
3) வதக்கும் பொழுது, பொடியாக நறுக்கிய பூண்டு சிறிதளவு, பொடியாக நறுக்கிய காய்ந்த மிளகாய் சிறிதளவு சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
4) கருவாடு வறுவல் செய்து முடித்து இறுதியாக, சிறிதளவு மிளகு தட்டி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
