தேவையான பொருட்கள்
- சிக்கன்
- காய்ந்த மிளகாய்
- தக்காளி
- சின்ன வெங்காயம்
- மிளகுத்தூள்
- சோம்பு
- கொத்தமல்லி
- சீரகம்
- மஞ்சள் தூள்
- சீரகப்பொடி
- பட்டை
- இஞ்சி-பூண்டு விழுது
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 50 கிராம் காய்ந்த மிளகாய், ஒரு கைப்பிடி கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் சோம்பு வறுத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 50 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, ஐந்து காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, 1/2 கப் சின்ன வெங்காயம், இரண்டு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின், 500 கிராம் சிக்கன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சீரகப்பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுப்பை மெதுவாக வைத்து, சிக்கன் பாதியளவு வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விடவும்.
