1) முட்டை கலக்கும் பொழுது சிறிதளவு கடலை மாவு சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.
2) முட்டை ஆம்லெட் செய்வதற்கு முட்டை கலக்கும் போது சிக்கன் குழம்பு கொஞ்சமாக சேர்க்கலாம்.
3) பிரட் துண்டின் நடுவில் சிறிய பகுதியை வெட்டி நீக்கிவிட்டு, தோசை கல்லில் வைத்து நீக்கிய பகுதியில் முட்டையை ஊற்றி ஆம்லெட் செய்தால் சுவையாக இருக்கும்.
4) முட்டை கலக்கும் பொழுது சிறிதளவு தக்காளியை மசித்து சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
