தேவையான பொருட்கள்
- சாதம்
- சுரைக்காய்
- பெரிய வெங்காயம்
- பூண்டு
- தக்காளி
- சோம்பு
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- பச்சை மிளகாய்
- எண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இரண்டு பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய ஒரு கப் சுரைக்காய்,1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்னர், ஒரு கப் சாதம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
