எள்ளு தயிர் சாதம்


தேவையான பொருட்கள் 

  • தயிர் 
  • சாதம் 
  • வெள்ளை எள்
  • இஞ்சி 
  • கடலைப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • கடுகு
  • எண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், இரண்டு ஸ்பூன் வெள்ளை எள் வறுத்து பொடியாக்கி கொள்ளவும். 

பாத்திரத்தில், ஒரு கப் சாதம், 1/4 கப் தயிர், இரண்டு ஸ்பூன் பொடியாக்கிய வெள்ளை எள், 1/2 ஸ்பூன் துருவிய இஞ்சி, தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து சாதத்தில் கலந்து கொள்ளவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
Previous Post Next Post