முட்டை தொக்கு சாதம்

தேவையான பொருட்கள் 

  • முட்டை 
  • சாதம் 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது
  • கறி மசாலா தூள் 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மஞ்சள் தூள் 
  • சோம்பு 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை

முதலில், இரண்டு முட்டையை வேக வைத்து, துருவி எடுத்துக் கொள்ளவும். 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 1/2 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். 

பின், ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள், துருவி வைத்துள்ள முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின்னர், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். 

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.

Previous Post Next Post