உருளைக்கிழங்கு குழி பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு 
  • உருளைக்கிழங்கு 
  • சீரகம் 
  • கடலை பருப்பு 
  • எண்ணெய் 
  • உப்பு 
  • நெய் 


செய்முறை 

கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய், 1/4 கப் துருவிய உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். 

ஒரு கப் தோசை மாவுடன் வதக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், பணியாரக்கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post