1) மட்டன் குழம்பு செய்து முடித்து இறுதியாக ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த சீராக பொடி மற்றும் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்தால், மட்டன் குழம்பு நன்கு சுவையாக இருக்கும்.
2) மட்டன் குழம்பில் மட்டன் பாதி அளவு வெந்த பின், சிறிதளவு தேங்காய், சிறிதளவு இஞ்சி இரண்டையும் அரைத்து மட்டன் குழம்பில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3) மட்டன் குழம்பு மசாலா அரைக்கும் பொழுது சிறிதளவு கசகசா சேர்த்தால் சுவையாக இருக்கும்.
4) மசாலா அரைக்கும் பொழுது சிறிதளவு சோம்பு சேர்த்தால் நன்கு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
