1) சிறிதளவு கத்தரிக்காய், உருளைக்கிழங்கு கருவாட்டு குழம்பில் சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
2) கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், வெந்தயம், மிளகு வறுத்து அரைத்து கருவாட்டு குழம்பில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
3) கருவாட்டு குழம்பில் ஒரு சிட்டிகை வெல்லம் சேர்க்கலாம்.
4) கருவாட்டுக் குழம்பு செய்து முடித்த பின் இறுதியாக ஒரு ஸ்பூன் வறுத்து அரைத்த வெந்தய பொடி மற்றும் வறுத்து அரைத்த சீரகப் பொடி ஒரு ஸ்பூன் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
