கன்னியாகுமரி தேங்காய் சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம்
  • தேங்காய் 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • வேர்க்கடலை 
  • முந்திரி 
  • சீரகம் 
  • கடுகு 
  • காய்ந்த மிளகாய் 
  • பச்சை மிளகாய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • தேங்காய் எண்ணெய் 
  • நெய் 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பத்து முந்திரி, இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். 

பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, ஒரு கைப்பிடி வேர்க்கடலை, இரண்டு ஸ்பூன் நெய், சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
Previous Post Next Post