சிக்கன் கப்சா

தேவையான பொருட்கள் 

  • சிக்கன் லெக் பீஸ் 
  • பாஸ்மதி அரிசி 
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • ஏலக்காய் 
  • சோம்பு 
  • பட்டை 
  • இஞ்சி விழுது 
  • பூண்டு விழுது
  • நட்சத்திர சோம்பு 
  • பிரியாணி இலை 
  • தனியா தூள் 
  • மிளகாய் தூள் 
  • சீரக தூள் 
  • மிளகுத்தூள் 
  • மிளகு 
  • பச்சை மிளகாய் 
  • எலுமிச்சை பழம்
  • நெய் 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

ஒரு அகலமான பாத்திரத்தில், நான்கு ஸ்பூன் நெய், 20 மில்லி எண்ணெய், ஒரு பிரியாணி இலை, நான்கு ஏலக்காய், ஒரு பட்டை, ஒரு நட்சத்திர சோம்பு, ஒரு ஸ்பூன் சோம்பு, ஒரு ஸ்பூன் இஞ்சி விழுது, இரண்டு ஸ்பூன் பூண்டு விழுது, ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு ஸ்பூன் தனியா தூள், இரண்டு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் சீரக தூள், ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து வதக்கவும். 

பின், நான்கு சிக்கன் லெக் பீஸ், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், தேவையான அளவு உப்பு, இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக வைக்கவும். 

வேக வைத்த பின், சிக்கன் லெக் பீஸ் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். 

பின்னர், 250 கிராம் பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் ஊற வைத்து சிக்கன் லெக் பீஸ் வெளியே எடுத்த பின்பு சேர்க்கவும். 

மேலும், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை மெதுவாக வைத்து வேக வைக்கவும். 

மற்றொரு கடாயில், 100 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தயார் செய்து வைத்துள்ள சிக்கன் லெக் பீஸ், 1/4 ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு ஃப்ரை செய்து எடுத்துக் கொள்ளவும். 

சாதம் வெந்தவுடன், ஃப்ரை செய்து வைத்துள்ள சிக்கன் லெக் பீஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.

Previous Post Next Post