தேவையான பொருட்கள்
- முட்டை
- கருப்பட்டி
- ஏலக்காய் பொடி
- தேங்காய் பால்
- நெய்
செய்முறை
முதலில், 200 கிராம் துருவிய கருப்பட்டி, 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கருப்பட்டியை உருக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், ஐந்து முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
பின், அதனுடன் 1/2 டம்ளர் தேங்காய் பால், 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, தயார் செய்து வைத்துள்ள கருப்பட்டி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பின்னர், ஒரு பாத்திரத்தில் நெய் தடவி, தயார் செய்து வைத்துள்ள முட்டையை பாத்திரத்தில் ஊற்றி ஆவியில் வைத்து வேக வைக்கவும்.
