1) சாம்பாருக்கு துவரம் பருப்பு வேக வைக்கும் பொழுது சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து வேக வைக்கலாம்.
2) சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் பொழுது சிறிதளவு வறுத்த வெந்தயம் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மணமாக இருக்கும்.
3) பருப்பு வேக வைக்கும் பொழுது சிறிதளவு தனியா, சிறிதளவு சீரகம் சேர்த்து வேக வைக்கலாம்.
4) சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும் பொழுது இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு காய்ந்த மிளகாய் சேர்த்து வேக வைத்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
