தேவையான பொருட்கள்
- முட்டை
- தக்காளி
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- மிளகாய் தூள்
- தனியா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகுத்தூள்
- மஞ்சள் தூள்
- சீரகம்
- கடுகு
- நல்லெண்ணெய்
- உப்பு
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், 6 பெரிய தக்காளியை 30 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு வைத்து தோலை நீக்கி விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பாதி அளவு வதங்கிய பின், ஒரு ஸ்பூன் தனியா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், வேக வைத்த ஐந்து முட்டையை இடையே வெட்டி விட்டு சேர்த்து கலந்து விடவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய சிறிதளவு கொத்தமல்லி இலை சேர்க்கவும்.
