மிளகு சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • மிளகு 
  • சீரகம் 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • பச்சை மிளகாய்
  • பெரிய வெங்காயம்
  • பெருங்காயத்தூள்
  • கடுகு 
  • முந்திரி பருப்பு 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • நெய் 


செய்முறை 

முதலில், நான்கு ஸ்பூன் மிளகு, இரண்டு ஸ்பூன் சீரகம் நன்கு தட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். 

கடாயில், நான்கு ஸ்பூன் நெய், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, பத்து முந்திரி பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

பாதி அளவு வதங்கிய பின், தட்டி வைத்துள்ள மிளகு-சீரகத்தில் பாதி அளவு சேர்த்து கலந்து விடவும். மேலும், 1/2 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு, மீதமுள்ள தட்டி வைத்துள்ள மிளகு-சீரகம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

Previous Post Next Post