தேவையான பொருட்கள்
- அவல்
- தயிர்
- இஞ்சி சாறு
- பச்சை மிளகாய்
- கடலைப்பருப்பு
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஒரு கப் அவலை நனைத்து தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.
நனைத்த அவலுடன், 1/2 கப் தயிர், 1/4 ஸ்பூன் இஞ்சி சாறு, தேவையான அளவு உப்பு, 1/4 டம்ளர் தண்ணீர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து அவலை தாளித்துக் கொள்ளவும்.
