பூண்டு புளி சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • பூண்டு 
  • காய்ந்த மிளகாய் 
  • புளி
  • பெருங்காயத்தூள் 
  • கடலைப்பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், 20 மில்லி நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு, நான்கு ஸ்பூன் கடலைப்பருப்பு, பொடியாக நறுக்கிய 10 பல் பூண்டு, நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து பூண்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும்.

பின், 1/4 கப் புளிக்கரைசல், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து புளிக்கரைசல் சுண்டி வரும் வரை கொதிக்க வைக்கவும். 

பின்னர், 1.5 கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.‌
Previous Post Next Post