தேவையான பொருட்கள்
- கத்திரிக்காய்
- தக்காளி
- பூண்டு
- பெரிய வெங்காயம்
- மிளகாய் தூள்
- சாம்பார் தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், நான்கு கத்திரிக்காய் அடுப்பில் காட்டி நன்கு சுட்டு தோலை நீக்கி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 6 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், 5 பல் பூண்டு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், நறுக்கிய ஒரு தக்காளி, ½ ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் சாம்பார் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து, தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும்.
பின், தயார் செய்து வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
