தேவையான பொருட்கள்
- பூண்டு
- மோர்
- பச்சை மிளகாய்
- தேங்காய்
- சீரகம்
- மஞ்சள் தூள்
- கடுகு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ¼ கப் துருவிய தேங்காய், இரண்டு பச்சை மிளகாய், ½ ஸ்பூன் சீரகம், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, 10 பல் பூண்டு, ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வதங்கிய பின், அடுப்பை மெதுவாக வைத்து அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின்னர், ஒரு கப் மோர் சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் அடுப்பை நிறுத்தவும்.
