தேவையான பொருட்கள்
- ரவை
- பூண்டு
- பச்சை மிளகாய்
- கடுகு
- உளுந்து பருப்பு
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ஒரு கப் ரவை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய எட்டு பல் பூண்டு, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், இரண்டு கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன் வறுத்து வைத்துள்ள ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
