பாசிப்பருப்பு-தேங்காய் கூட்டு


தேவையான பொருட்கள் 

  • பாசிப்பருப்பு 
  • தேங்காய் 
  • பச்சை மிளகாய்
  • சீரகம் 
  • புடலங்காய் 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

முதலில், ¼ கப் தேங்காய், ½ ஸ்பூன் சீரகம், இரண்டு பச்சை மிளகாய், ½ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில், ½ கப் பாசிப்பருப்பு, ¼ கப் பொடியாக நறுக்கிய புடலங்காய், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், வேக வைத்துள்ள பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் மேலும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கலந்துவிடவும். 
Previous Post Next Post