முட்டை ரசம் சாதம்


தேவையான பொருட்கள்

  • சாதம் 
  • முட்டை 
  • ரசம் பொடி 
  • பூண்டு 
  • மிளகு 
  • சீரகம் 
  • கடுகு
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 

செய்முறை 

கடாயில், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய நான்கு பல் பூண்டு, ½ ஸ்பூன் தட்டிய சீரகம், ½ ஸ்பூன் தட்டிய மிளகு சேர்த்து வதக்கவும்.

வதங்கிய பின், ஒரு ஸ்பூன் ரசம் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

பின், இரண்டு முட்டை உடைத்து ஊற்றி, முட்டை பொரிந்து வரும் வரை கிளறவும். 

பின்னர், ஒரு கப் சாதம் சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

Previous Post Next Post