தேவையான பொருட்கள்
- மீன்
- சீரக சம்பா அரிசி
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- தேங்காய்
- சோம்பு
- பட்டை
- ஏலக்காய்
- பச்சை மிளகாய்
- பிரியாணி மசாலா தூள்
- மீன் சில்லி பொடி
- உப்பு
- எண்ணெய்
- புதினா
செய்முறை
முதலில், ¼ கப் துருவிய தேங்காய், ½ ஸ்பூன் சோம்பு பொன்னிறமாக வறுத்து ¼ டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
குக்கரில், 20 மில்லி எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் சோம்பு, ஒரு பட்டை, ஒரு ஏலக்காய், நீளமாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, நீளமாக நறுக்கிய நான்கு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா சேர்த்து வதக்கவும்.
பின், அரைத்து வைத்துள்ள தேங்காய், இரண்டு ஸ்பூன் பிரியாணி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் மீன் சில்லி பொடி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், 200 கிராம் மீன் சேர்த்து ஐந்து நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். மேலும், 30 நிமிடம் ஊற வைத்த 400 கிராம் அரிசி, 600 மில்லி தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு ஒரு விசில் விடவும்.
