தக்காளி-இஞ்சி சூப்


தேவையான பொருட்கள் 

  • தக்காளி 
  • இஞ்சி 
  • பச்சை மிளகாய் 
  • மிளகுத்தூள் 
  • சீரக பொடி 
  • கடுகு 
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

செய்முறை 

முதலில், மூன்று தக்காளியை 3 நிமிடம் வேக வைத்து, ஆறிய பின் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில், இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, சிறிதளவு கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய ஒரு ஸ்பூன் இஞ்சி, ஒரு பச்சை மிளகாய், அரைத்து வைத்துள்ள தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், ½ ஸ்பூன் சீரக பொடி, தேவையான அளவு உப்பு, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

Previous Post Next Post