தேவையான பொருட்கள்
- சிக்கன்
- மிளகு
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- இஞ்சி-பூண்டு விழுது
- பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- சோம்பு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், நான்கு பச்சை மிளகாய், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
பின், 500 கிராம் சிக்கன், நான்கு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை நன்கு வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்க்கவும்.
