தேவையான பொருட்கள்
- புளி
- தேங்காய்
- காய்ந்த மிளகாய்
- வெந்தயம்
- உளுந்து பருப்பு
- கடுகு
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
செய்முறை
முதலில், ¼ கப் துருவிய தேங்காய், மூன்று காய்ந்த மிளகாய் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ¼ கப் புளிக்கரைசல், ½ கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க தொடங்கியவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
பின், மற்றொரு கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் வெந்தயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு சேர்த்து குழம்பை தாளிக்கவும்.
