முருங்கைக்கீரை சாதம்


தேவையான பொருட்கள் 

  • சாதம் 
  • முருங்கைக்கீரை 
  • பெரிய வெங்காயம் 
  • காய்ந்த மிளகாய்
  • பூண்டு 
  • மஞ்சள் தூள் 
  • கடுகு 
  • உளுந்து பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ½ ஸ்பூன் கடுகு, ½ ஸ்பூன் உளுந்து பருப்பு, பொடியாக நறுக்கிய மூன்று பல் பூண்டு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும் 

வதங்கிய பின், ½ கப் முருங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். 

பின், ஒரு கப் சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். 

Previous Post Next Post