தக்காளி ஆம்லெட்


தேவையான பொருட்கள் 

  • முட்டை 
  • தக்காளி 
  • பெரிய வெங்காயம் 
  • கடலை மாவு 
  • பச்சை மிளகாய்
  • மிளகாய் தூள் 
  • மிளகுத்தூள் 
  • உப்பு 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

பாத்திரத்தில், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், இரண்டு ஸ்பூன் கடலை மாவு, பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி, ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின், இரண்டு முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். 

தயார் செய்து வைத்துள்ள முட்டையை தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் சிறிதளவு மிளகுத்தூள் தூவி விட்டு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும். 

Previous Post Next Post