தேங்காய் பால் சிக்கன் வறுவல்


தேவையான பொருட்கள் 

  • சிக்கன் 
  • தேங்காய் பால்
  • பெரிய வெங்காயம் 
  • தக்காளி 
  • பச்சை மிளகாய் 
  • இஞ்சி-பூண்டு விழுது 
  • சிக்கன் மசாலா தூள் 
  • மிளகாய் தூள் 
  • மிளகு
  • சோம்பு 
  • மஞ்சள் தூள் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். 

வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பின், 300 கிராம் சிக்கன், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

பின்னர், ½ டம்ளர் தேங்காய் பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சுண்டி வரும் வரை வேக வைக்கவும். 

இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும். 
Previous Post Next Post