தேவையான பொருட்கள்
- மட்டன்
- தேங்காய் பால்
- பெரிய வெங்காயம்
- தக்காளி
- பச்சை மிளகாய்
- இஞ்சி-பூண்டு விழுது
- மட்டன் மசாலா தூள்
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- மிளகு
- சோம்பு
- மஞ்சள் தூள்
- உப்பு
- நல்லெண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
கடாயில், ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், இரண்டு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பின், 300 கிராம் மட்டன், இரண்டு ஸ்பூன் மட்டன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், ½ ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் ஒன்றிரண்டாக உடைத்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின்னர், ½ டம்ளர் தேங்காய் பால், இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்துவிடவும்.
