தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- பூண்டு
- பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- இஞ்சி
- சோம்பு
- கறி மசாலா தூள்
- மிளகாய் தூள்
- சிக்கன் மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி இலை
செய்முறை
முதலில், ஐந்து பல் பூண்டு, பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் சோம்பு, இரண்டு பச்சை மிளகாய் தட்டி எடுத்துக் கொள்ளவும்.
கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், தட்டி வைத்துள்ள பொருட்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின், பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம், சிறிதளவு கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
வதங்கிய பின், பொடியாக நறுக்கிய 300 கிராம் உருளைக்கிழங்கு, ஒரு ஸ்பூன் கறி மசாலா தூள், இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும்.
பின், 300 மில்லி தண்ணீர் சேர்த்து தண்ணீர் சுண்டி வரும் வரை வேக வைக்கவும்.
இறுதியாக, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.
