தேவையான பொருட்கள்
- மீன்
- சோள மாவு
- கடலை மாவு
- சிக்கன் மசாலா தூள்
- மீன் சில்லி பொடி
- மிளகாய் தூள்
- மிளகுத்தூள்
- கறி மசாலா தூள்
- மஞ்சள் தூள்
- இஞ்சி-பூண்டு விழுது
- எலுமிச்சை சாறு
- உப்பு
- கறிவேப்பிலை
- எண்ணெய்
செய்முறை
சுத்தம் செய்த 500 கிராம் மீனை தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள மீன் உடன், 50 கிராம் சோள மாவு, 25 கிராம் கடலை மாவு, இரண்டு ஸ்பூன் மீன் சில்லி பொடி, ஒரு ஸ்பூன் சிக்கன் மசாலா தூள், ஒரு ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் வைக்கவும்.
பின், எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
